புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபான விற்பனைக்கு தடை

தினமும் மதுபான விற்பனையை கணக்கு காட்ட வேண்டும், அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என்ற விதி பிறப்பிக்கப்பட்டு இருந்தது. வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று முதல் மூன்று நாளுக்கு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவோடு விற்பனையில் நிறைவு பெற்றதால் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணங்களும் அதிக அளவில் மதுபான கடைகளை கூடி மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

நேற்று இரவு 10 மணிக்கு அனைத்து மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர். முன்னதாக, மதுபான கிடங்குகளுக்கு நேற்று மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்பட்டது. புதுச்சேரியில் மட்டும் 453 மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால், பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியுள்ள தாசில்தார் ராஜேஷ் கண்ணா, ”புதுச்சேரியில் 19 எல்லைகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மதுபான நடமாட்டம் கண்காணிக்கப்படும். இது மட்டுமல்லாது கலால் துறையில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டறையில் மதுபான கடைகள், கிடங்கு மற்றும் 19 எல்லைகள் 24 மணி நேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் .

Source link