புதுச்சேரியில் இருநாட்களில் பிரச்சாரம் ஓய்கிறது – நாளை அமித் ஷா, ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு நாட்களில் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் நாளை அமித்ஷா, ராகுல். ஸ்டாலின், சீமான் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. இரு நாட்களில் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி இரு நாட்களில் முக்கியத் தலைவர்கள் புதுச்சேரியில் பிரச்சாரத்துக்கு குவிகின்றனர்.

மத்திய உள்துரை அமைச்சர் அமித் ஷா நாளை தனிவிமானத்தில் கொச்சியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு புதுச்சேரி வருகிரார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மண்ணாடிப்பட்டு திருக்கனூரில் பிரச்சாரக் கூட்டத்தில் மாலை பங்கேற்கிறார்.

Source link