மேலும் தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்றதுபோல, புதுச்சேரியிலும் தலைமை ஏற்க அக்கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு திமுக தலைமை, புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைமை என்ற கோரிக்கையை புதுச்சேரி காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அத்துடன், கடந்த தோ்தலில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் போட்டியிட்டு, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதனால் இந்த முறை திமுக 15 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யக் கோரி காங்கிரஸிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது.
இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், புதுச்சேரி மாநில வேட்பாளர்கள் நோ்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று நடத்தி முடித்தார்.
மேலும், திமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அனைத்திலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
