சென்னை,
புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் நவ., 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை போனஸ் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
போனஸ்
2025 – 26 காலகட்டத்தில் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 6 மாதங்கள் அரசுப் பணியில் இருந்தவர்கள் இந்த போனஸ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 7,000 போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
இதன்படி 2026 மார்ச் 31 நிலவரப்படி, பணியாளர்கள் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்.
* 6 மாதங்களுக்கும் குறைவாக பணியாற்றியவர்களுக்கு, பணிபுரிந்த காலத்திற்கு விகிதாசார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும்.
* தகுதியுள்ள நிரந்தரப் பணியாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 7,000 வரை (30 நாட்களுக்கான போனஸ் ரூ. 6,908) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* 240 நாட்கள் பணிபுரிந்த தற்காலிகப் பணியாளர்களுக்கு ரூ. 1,184 கிடைக்கும்.
* உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) திட்டத்தின் கீழ் வரும் பணியாளர்களுக்கு இது பொருந்தாது.
* புதுச்சேரி நிதித்துறை துணைச் செயலாளர் சிவகுமார் பிறப்பித்த உத்தரவின்படி, இதற்கான தொகை 2026–27 நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போனஸ் குறித்த இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
