புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவறை அருகே படுக்கவைக்கப்பட்ட நோயாளிகள்: நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி,

கழிவறை வாசல் அருகே படுக்கவைக்கப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக சென்ற எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன், அந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் சில நோயாளிகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், மருத்துவமனை கழிவறை அருகில் படுக்கவைக்கப்பட்டிருந்தனர். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டார். மேலும், அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, அனைத்து நோயாளிகளுக்கும் படுக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source link