புதுச்சேரி: சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஏப்., 6ம் தேதி புதுச்சேரி

புதுச்சேரி: சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஏப்., 6ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டி யிடும் பா.ஜ., வேட்பாளரான அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து, அமித் ஷா ஓட்டு சேகரிக்கிறார். இதற்காக, வரும் ஏப்ரல் 6ம் தேதி, திருக்கனுார் கடை வீதியில், பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்.

மேலும், அப்பகுதி பா. ஜ., தேர்தல் பொறுப் பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அமித் ஷா பிரசாரக் கூட்டத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பிரமாண்ட மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில், தே.ஜ., கூட்டணியின் மற்ற வேட்பாளர்களை ஆதரித்தும் அமித் ஷா ஓட்டு சேகரிக்க உள்ளார்.

Source link