வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனாவும் களம் காண்கின்றனர். மேலும், உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், மற்றும் முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யாவும், கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தியும் போட்டியிடுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தவெக வேட்பாளர்கள் அனைவரும் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுவதாகவும், அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
