புதுச்சேரி தேர்தல் 2026: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி-அனல் பறக்க பிரச்சாரம் செய்த சசிகலா! – sasikala campaigns in puducherry the people must bring about a new revolution.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய புரட்சியை மக்கள் செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு உறுதி அளிக்கப்படும் என்று சசிகலா பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார்.

sasikala(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாடு ,புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் தமிழினத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில் தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம்.ஆனால் இந்த முறை 30 ஆண்டுகால மரபை இந்திய தேர்தல் ஆணையம் முறித்துள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026

புதுச்சேரியில் வழக்கம்போல் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணியில் போட்டியிட உள்ளது. இந்த நிலையில், இரண்டு கூட்டணிகளை தவிர்த்து மூன்றாவது கூட்டணியாக உருவெடுக்க உள்ளார் சசிகலா.பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் போக்கு வெடித்ததன் காரணமாக இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில் ,அன்புமணி தலைமையிலான பாமக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. இதில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக மதசார்பற்ற கூட்டணியில் இணைந்தால் விசிக வெளியேறிவிடும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார் திருமாவளவன்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

இதனால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கூட்டணி வைக்க முடியாமல் ராமதாஸ் தவித்து வந்தார். இதற்கிடையே கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் டிடிவி தினகரன் சித்தியுமான சசிகலா புதிய கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டினார்.இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி திண்டிவனம் தைலாபுர தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக சென்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது வரும் 2026 தமிழக மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக புதிய கூட்டணி அமைப்பதாக அறிவித்தனர். இந்த சூழலில் அஇ பு த ம மு க சார்பில் புதுச்சேரியில் நான்கு தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்த சசிகலா நான்கு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.

புதுச்சேரியின் அஇபுதமமுக வேட்பாளர்கள்
  • நெட்டப்பாக்கம் (SC): : டாக்டர் கே. சிலம்பரசன்
  • வில்லியனூர்: எம். நந்தகோபால்
  • உழவர்கரை: எம்.யு. லாவண்யா
  • இந்திரா நகர்: எஸ்.ஜெயபால் (அக) செங்கன்ஹி
  • கட்சியின் தேர்தல் சின்னம் ‘தென்னந்தோப்பு’ ஆகும்.

புதுச்சேரியில் சசிகலா பிரச்சாரம

இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுகாக சசிகலா பரப்புரை மேற்க்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,புதுச்சேரி மக்கள் மிகவும் பாவப்பட்ட மக்கள். இதனைத் தொடர்ந்து நாங்கள் கவனித்துக் கொண்டே வருகிறோம். இந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய புரட்சியை புதுச்சேரி மக்கள் செய்ய வேண்டும். ஏற்கனவே புதுச்சேரியில் ஆளும் கட்சியினர் எப்படி செயல்பட்டார்கள் என்பது குறித்து உங்களுக்கு நன்றாகவே தெரியும் எங்களுடைய இந்த கூட்டணிக்கு வாக்களித்தால் இங்கே நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது இருக்கு அதனை நிச்சயம் செய்து கொடுப்போம் என்று கூறினார்.
அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு சென்று கொண்டே இருப்பார்கள். ஆனால் நீங்கள் அது போன்று கிடையாது நிச்சயம் செய்து காட்டுவோம். எங்கள் வேட்பாளரால் புதுச்சேரி மக்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். அதேபோல் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் உத்தரவாதம் தர முடியும். புதுச்சேரி இந்திரா நகரில் வேட்பாளர் ஜெயகோபாலை ஆதரித்து சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.