சென்னை: த.வெ.க., சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார்.
புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவதென முடிவெடுத்த த.வெ.க., 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலை கடந்த வாரம் நடத்தியது.
அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான சாமிநாதன், அசனா, முன்னாள் காவல் அதிகாரி சந்திரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து தட்டாஞ்சாவடியில் பன்னீர்செல்வமும், மங்கலத்தில் சத்யாவும் த.வெ.க., சார்பில் போட்டியிட உள்ளனர்.
