புதுச்சேரி: புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுப்போம் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் விஜய் பேசியதாவது: காங்.,திமுக பேருக்கு தான் கூட்டணி; சில தொகுதிகளில் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தான் நிற்கிறார்கள். மக்களோடு மக்களாக நிற்பவர்களை தான் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன்; உங்கள் தேவைகள் நிறைவேற துணை நிற்போம்.
புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுப்போம். தமிழகத்தில் தவெக ஆட்சி அமையும்; அதுபோல் புதுச்சேரியிலும் அமையணும்; ஒரு விரல் புரட்சியான விசில் புரட்சியை உருவாக்குங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.தொடர்ந்து, ‘நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாருகொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டுக்கோடி பேரு!’ என்று பாட்டுப்பாடியும் பிரசாரம் செய்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் பேசியது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
