புதுடில்லி:'அவசர அழைப்பிற்கு, எங்களை எப் போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உதவி செய்யக்

புதுடில்லி:’அவசர அழைப்பிற்கு, எங்களை எப் போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உதவி செய்யக் காத்திருக்கிறோம்’ என கூறும் வகையில், குரங்கு குட்டி ஒன்று, பொம்மையை ஒரு கையிலும், மறு கையில் பெண் போலீஸ் ஒருவரின் கையை பிடித்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, பாராட்டுகளை பெற்றுள்ளது, டில்லி போலீஸ்.

ஜப்பான் மிருகக்காட்சி சாலை ஒன்றில், தன் தாயால் புறக்கணிக்கப்பட்ட குட்டிக் குரங்கு ஒன்று, படிப்படியாக தேறி, அங்கிருப்போருடன் நட்புறவாக பழகி வருவதை, ‘பஞ்ச்’ என ஜப்பான் மிருகக்காட்சி சாலையினர் வர்ணிக்கின்றனர்.

சமூகவலைதளத்தில் அநேகம் பேரால் பார்க்கப்பட்ட அந்த குட்டிக்குரங்கின் சேஷ்டை, உலக பிரசித்தம்.

அந்த குரங்குக் குட்டி, டெடி பியர் ஒன்றை ஒரு கையால் பிடித்திருப்பது போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ள டில்லி போலீசார், அந்த குட்டிக்குரங்கு தன் மறு கையால், பெண் போலீஸ் ஒருவரை பிடித்திருப்பது போன்ற காட்சிகளை வெளியிட்டு உள்ளனர்.

அதில், ‘அவசர அழைப்பிற்கு எங்களின் தொலைபேசி எண் 112ஐ அழையுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

இந்த விளம்பரத்திற்கு, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Source link