புதுடில்லி:''இந்த சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம்

புதுடில்லி:”இந்த சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் இந்த உலகுக்கு எடுத்து காட்டுகிறது. அதன் வழி அனைவரும் நடப்போம்,” என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

டில்லியில் , குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் பங்கேற்ற டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறும் போது,”இந்த சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பல்கலைக்கழகம் உலகுக்கு, இந்த நாட்டிற்கு, இந்த மாநிலத்திற்கு காட்டுகிறது. இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், இந்த நாட்டுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும்,” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், டில்லி துணை நிலை ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் தரண்ஜீத் சிங் சாந்து, டில்லி பல்கலைக்கழக துணை வேந்தரும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவருமான யோகேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டில்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் இதில் கலந்து கொள்ள முடியாததால், வீடியோவில் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மகேஷ் வெர்மா, பல்கலைக்கழகம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், 26,649 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 124 பேர் பிஎச்.டி., 11 பேருக்கு எம்.பில்., 2,873 முதுகலை பட்டதாரிகள், 22475 இளநிலை பட்டதாரிகள், 477 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பட்டங்கள் பெற்றதாக குறிப்பிடப்பட்டார்.

Source link