புதுடில்லி:'சுகாதார பணியாளர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும் முழு மனதாக தீர்த்து வைக்க டில்லி மாநில

புதுடில்லி:’சுகாதார பணியாளர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும் முழு மனதாக தீர்த்து வைக்க டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது’ என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

டில்லியில் நேற்று முதல்வர் ரேகா குப்தாவை அவரது அலுவலகத்தில், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் சங்கத்தினர் சந்தித்தனர். பின், முதல்வர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

சுகாதார பணியாளர்களின் அனைத்து பிரச்னைகளையும் முழு மனதாக தீர்க்க, முதல்வர் ரேகா குப்தா முடிவு செய்துள்ளார். சுகாதாரப்பணியாளர்களுக்கு ஆரோக்கியமான உடல் நல வசதிகள், நிரந்தர வேலை வாய்ப்பு, கண்ணியமான வேலைச்சூழல் போன்றவற்றை வழங்க, அந்தந்த துறைகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Source link