புதுடில்லி:டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், குளுக்கோமா எனும் கண் பார்வை குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு, விசேஷமான ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இதனால், பலருக்கு பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.
டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், கடந்த, 10ம் தேதி, குளுக்கோமா எனும் கண் பார்வை குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட துல்லியமான ஆப்பரேஷன் வாயிலாக, பல நோயாளிகளுக்கு பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.
இதற்காக, ‘ஹைட்ரஸ் மைக்ரோ ஸ்டன்ட் ஆஞ்சியோபிளாஸ்டி’ ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அந்த நோயாளிகளுக்கு கண் புரைக்கான ஆப்பரேஷனும் வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இதற்காக, ‘ஹைடெல்பெர்க் ரிடினா ஆஞ்சியோ பிளாஸ்டி’ உள்ளிட்ட மேம்பட்ட ஆப்பரேஷன் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இந்த குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை வாயிலாக, குளுக்கோமா எனும் கண் பார்வை குறைபாடு உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சையில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான ஆப்பரேஷன், டாக்டர் ஆர்த்தி சரினால் நடந்தது.
