புதுடில்லி: அண்டை மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு பஸ் கவிழ்ந்து, இரண்டு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த, 23 பேர்

புதுடில்லி: அண்டை மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு பஸ் கவிழ்ந்து, இரண்டு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த, 23 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து புதுடில்லிக்கு ஒரு சொகுசு பஸ், 30 பயணியருடன் புறப்பட்டது. புதுடில்லி கரோல்பாக் ஜண்டேவாலன் ஹனுமான் மந்திர் அருகே, வளைவில் திரும்பும்போது பஸ் கவிழ்ந்தது.

பஸ்சுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணியர் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நசுங்கினர். பயணியரின் அலறல் கேட்டு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்தனர். தகவல் அறிந்து கரோல்பாக் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

பஸ்சுக்குள் சிக்கித் தவித்தவர்களை மீட்டனர். இரண்டு பயணியர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். காயம் அடைந்த, 23 பேர், கங்கா ராம், ராம் மனோகர் லோஹியா மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரை சேர்ந்த ஷெஹ்பாஜ் ஆலம்,30, மற்றும் மகேஷ்,22, என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ராஜஸ்தானின் அல்வாரை சேர்ந்த பஸ் டிரைவர் பங்கஜ் குமாரை,26, கைது செய்தனர்.

Source link