புதுடில்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக

புதுடில்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையே சமீபத்தில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இது குறித்தும், மத்திய பட்ஜெட் குறித்தும் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்து வருகிறார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுலின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் தெளிவான விளக்கத்தை அளித்துவிட்டனர்.

இந்த சூழலில் இன்றும் அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில், இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. பிரதமரிடம் சில எளிய கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

நமது பால் பொருட்களை அமெரிக்க விவசாயத் துறையைச் சார்ந்து இல்லையா? சோயா எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதித்தால், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் நாடு முழுவதும் உள்ள நமது சோயா விவசாயிகள் நிலை என்னவாகும்?

வர்த்தகம் அல்லாத தடைகளை நீக்குவது என்றால் என்ன? விவசாயிகள் இந்த தெளிவைப் பெற வேண்டும். இது இன்றைய காலத்திற்கானது மட்டுமல்ல. எதிர்காலத்தையும் உள்ளடக்கியது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Source link