புதுடில்லி: அமெரிக்க நிறுவனம் நடத்திய உலகின் மிகவும் பிரபலமான தலைவர் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து

புதுடில்லி: அமெரிக்க நிறுவனம் நடத்திய உலகின் மிகவும் பிரபலமான தலைவர் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் மிகவும் பிரபலமான தலைவர் யார் என்ற கருத்தை கணிப்பை அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம் நடத்தியது. கடந்த 2 முதல் 8ம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தி உலகளவில் பிரபலமான தலைவர் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டது.

இந்த பட்டியலில் பிரதமர் மோடி, 68 சதவீதம் பேர் ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார். மோடியின் ஆட்சி, திட்டம், சர்வதேச அளவிலான செயல்பாடுகளால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டும் இந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் மோடி முதலிடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில்

2வது இடத்தில் இடத்தில் சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மலின், தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

3வது இடத்தில் செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ்

4வது இடத்தில் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே

5வது இடத்தில் சனே தகைச்சி

6வது இடத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி

7 வது இடத்தில் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன் பாம்

8 வது இடத்தில் பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர்

9 வது இடத்தில் பிரேசில் அதிபர் இனாசியோ லுலா டா சில்வா

10வது இடத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரும் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 39 சதவீத மக்கள் ஆதரவுடன் 13வது இடத்திலும், பிரிட்டன் பிரதமர் ஸ்டார் கெய்மர் 24வது இடத்தில் உள்ளனர்.

இந்த பட்டியலின் கடைசி இடத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளார்.

Source link