புதுடில்லி: அ சாம் சட்டசபை தேர்தல் பிரசாரம் முடிவிற்கு வந்ததும், பத்திரிகையாளர் சந்திப்பிற்கு காங்.,

புதுடில்லி: அ சாம் சட்டசபை தேர்தல்
பிரசாரம் முடிவிற்கு வந்ததும், பத்திரிகையாளர் சந்திப்பிற்கு காங்.,
ஏற்பாடு செய்தது. ஆனால், பிரியங்காவிற்கு இதில் விருப்பமில்லை. காங்.,
செய்தித் தொடர்பாளர் பவன் கெராவிடம், ‘பத்திரிகையாளர் சந்திப்பு வேண்டாம்.
அசாமில் காங்., வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது எனச் சொல்ல, அதில் ஏதாவது
பிரச்னையாகி விடக்கூடாது’ எனக் கூறி இருக்கிறார்.

ஆனால், இதை
கேட்காமல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் பவன் கெரா. ‘அசாம் முதல்வர்
ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி புயான், மூன்று பாஸ்போர்ட்
வைத்துள்ளார். அமெரிக்காவில், 52,000 கோடி ரூபாய்க்கு வியாபாரமும்
செய்கிறார்’ என, அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தலுக்கு இரண்டு
நாட்கள் முன்னதாக, பவன் கெரா இப்படி கூறியது, மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷாவை கோபப்படுத்தி விட்டதாம். உடனே, அவர் அசாம் முதல்வருக்கு போன்
செய்து, ‘பவன் கெராவை விடக்கூடாது. டில்லியில், காங்கிரசின் ஷீலா தீட்சித்
முதல்வராக இருந்த போது, அவரது செயலராக பணியாற்றியவர் பவன் கெரா. அப்போது
ஏகப்பட்ட பணம் சேர்த்து விட்டார்’ என்றாராம்.

இதையடுத்து, பவன்
கெரா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது அசாம் போலீஸ். உடனே,
டில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு அவரை கைது செய்ய வந்தனர். ‘தன்
குற்றச்சாட்டு அனைத்தும் பொய். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால்
உருவாக்கப்பட்ட ஆவணங்களை நம்பி சொல்லி விட்டோமே’ என பயந்து, உடனே காங்.,
ஆட்சி செய்யும், தெலுங்கானாவின் ஹைதராபாதிற்கு பறந்து விட்டார் பவன். இவரது
டில்லி வீட்டில் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றது அசாம்
போலீஸ். உடனே, ஹைதராபாத் நீதிமன்றத்தை அணுகி, ஒரு வாரத்திற்கு முன்ஜாமின்
பெற்றுள்ளார் பவன் கெரா.

இந்த விவகாரம், பிரியங்காவை
கடுப்பாக்கியுள்ளதாம். மேலும் சில காங்., தலைவர்களும், ‘எதற்கு தேர்தல்
சமயத்தில் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டும்’ என, பவன்
கெரா மீது கோபப்படுகின்றனராம். அசாம் முதல்வர் சர்மா காங்., தலைவர் கோகோய்
மனைவிக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு என, குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதிலடி தான் இது என, சில காங்., தலைவர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம், காங்., புதிதாக டில்லியில் கட்டியுள்ள, ‘தலைமை
அலுவலகத்தில் வாஸ்து சரியில்லை. அதை சரி செய்தால் தான், காங்., இனிமேல்
வெற்றி பெற முடியும்’ என, ஜோதிடர் ஒருவர் ராகுலிடம் சொல்லி உள்ளாராம்.
‘இருப்பது போதாது இதில் இது வேறா’ என, ஜெய்ராம் ரமேஷ் உட்பட சில
காங்கிரசார் அங்கலாய்க்கின்றனர்.

Source link