புதுடில்லி: இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிய வந்துள்ளது.
நம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில், செயல்பாட்டில் உள்ளவற்றின் பங்கு கடந்த 2018 – 19ம் நிதியாண்டில் 70 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி அது 62 சதவீதமாக சரிந்துள்ளது.
இதற்கு நிபுணர்கள் கூறும் காரணம்: பல வெளிநாட்டு நிறுவனங்கள் சிறப்பான வணிக மேலாண்மை மற்றும் வரி சலுகைகளுக்காக சிறிய தொடர்பு அலுவலகங்களை மூடிவிட்டு, நேரடி துணை நிறுவனங்களை பதிவு செய்ய துவங்கியுள்ளன. இது, ஒரு நேர்மறையான மாற்றமாக கருதப்படுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழையும்போது முதலில் கிளை அலுவலகங்கள் அல்லது தொடர்பு அலுவலகங்களாக பதிவு செய்கின்றன. வணிகம் முதிர்ச்சியடைந்தவுடன், அந்த அலுவலகங்களை மூடிவிட்டு, அதிக அதிகாரங்கள் கொண்ட நேரடி துணை நிறுவனங்களை அமைக்கின்றன.
பழைய அலுவலகங்கள் மூடப்படுவதால், செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை குறைகிறது.
![]() |

