புதுடில்லி: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த மைல்கல் ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. பிரதமர் மோடியின் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை தவிர்க்க முடியாத எதார்த்தமாக இந்த ஒப்பந்தம் மாற்றும். மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறும்.
கடின உழைப்பாளி விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோருக்கு ஏற்றம் அளிக்கும். அதே வேளையில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் உறுதி செய்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்காக மோடி மனமார்ந்த நன்றிகள். மேலும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
