புதுடில்லி: '' ஈரான் வெளியுறவு அமைச்சருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கப்பல்கள் பாதுகாப்பு

புதுடில்லி: ” ஈரான் வெளியுறவு அமைச்சருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கப்பல்கள் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி குறித்து 3 முறை பேசி உள்ளார்,” என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், ஈரான் வெளியுறவு அமைச்சரும் கடந்த சில நாட்களில் 3 முறை தொலைபேசியில் பேசி உள்ளனர். கடைசியாக அவர்கள், கப்பல்கள் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி தொடர்பானது. இதற்கு மேல் நான் எதுவும் கூற முடியாது.

ஈரானில் இருந்து அர்மீனியா, அஜர்பைஜான் வழியாக இந்தியா திரும்ப உதவும் மாணவர்களுக்கு உதவி வருகிறோம்.வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுடன் நமது தூதரகங்கள் தொடர்பில் உள்ளன

ஈரானில் முன்னரோ அல்லது தற்போதே 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்து வருகின்றனர். அவர்களில், மாணவர்கள், கடற்பணியாளர்கள், வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சில யாத்ரீகர்கள் அடக்கம். அவர்களில் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். தெஹ்ரானில் தங்கியிருந்த மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள், ஈரானிலேயே பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம்.

அஜர்பைஜான் மற்றும் ஆர்மினியா சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்புவதற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம். தரைவழியாக எல்லைகளைக் கடந்து செல்வதிலும் துணையாக இருக்கிறோம். தரை வழியாக ஈரானை விட்டு வெளியே விரும்புபவர்கள், தூதரகம் வழங்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link