புதுடில்லி: கடந்த 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே என்ற மாணவி தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளை நிரப்புவதற்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது
1,087 பதவிகளை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வு நடந்தது . ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடந்தது. நேர்முகத்தேர்வு கடந்த மாதம் நடந்தது.
இந்நிலையில் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 958 பேரை அவர்களை சிவில் சர்வீஸ் பணிகளில் பணியமர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்வில் தேசிய அளவில் அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே இரண்டாவது இடத்தையும்ஆகான்ஷ் துல் 3வதுஇடத்தையும் பிடித்துள்ளார்.
