புதுடில்லி: கடந்த 2025 செப்., மாதம் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி., வரி மாற்றங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்ததை விட, கார்கள் போன்ற ஆடம்பர பொருட்களின் விலை மட்டுமே குறைந்தது என, என்.ஐ.பி.எப்.பி., எனப்படும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை:
மத்திய அரசு கடந்த 2025 செப்., 22 முதல் ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை 5, 18 மற்றும் 40 சதவீதம் என மூன்று அடுக்குகளாக மாற்றியது. நுகர்வோர் சுமையை குறைக்கவும், பொருட்களின் தேவையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், வரி குறைக்கப்பட்ட பிறகும் உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தையும், அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
விலை மாற்றம்
பொருட்கள் விலை மாற்றம் (%) நிலை
கார் -7.52 விலை குறைவு
ஏ.சி., -6.40 விலை குறைவு
மோட்டார் சைக்கிள் -5.19 விலை குறைவு
பால் +0.83 விலை உயர்வு
நெய் +0.77 விலை உயர்வு
விமான கட்டணம் +8.65 விலை உயர்வு
