புதுடில்லி: 'சன்சத் ரத்னா' விருதுக்கு எம்.பி.,க்களை தேர்வு செய்ய, மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா தலைமையில்,

புதுடில்லி: ‘சன்சத் ரத்னா’ விருதுக்கு எம்.பி.,க்களை தேர்வு செய்ய, மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விருப்பப்படி, பார்லிமென்டின் இரு சபைகளிலும், சிறப்பாக செயல்படும் எம்.பி.,க்களுக்கு, 15 ஆண்டுகளாக, ‘சன்சத் ரத்னா’ எனப்படும், ‘பார்லிமென்ட் ரத்தினம்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

‘பிரைம் பாயின்ட்’ சீனிவாசன் நிறுவிய, ‘சன்சத் ரத்னா’ விருதளிப்பு குழு, இந்த விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

பார்லிமென்டில் கேட்கப்பட்ட கேள்விகள், விவாதங்களின் நேரம், தனி நபர் தீர்மானங்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில், ‘சன்சத் ரத்னா’ விருதுக்கு, எம்.பி.,க்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.

இந்த ஆண்டு விருதுக்கு, எம்.பி.,க்களை தேர்வு செய்ய, ‘தினமலர்’ நாளிதழ் தலைமை நிருபராக இருந்த ஆர். நுாருல்லா தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.

குழுவின் இணை தலைவராக ஆடிட்டர் மோகன், உறுப்பினர்களாக ஜெய்ப்பூர் நிம்ஸ் பல்கலை பேராசிரியர் டாக்டர் சரிக்கா, கல்வியாளர் மற்றும் ஏ.ஐ., நிபுணர் தீபா லெனின், தேசிய பென்ஷன் திட்ட துணைத் தலைவர் சுரேஷ், எம்.ஜி.ஆர்., நிகர்நிலை பல்கலை கழக ஏ.ஆர்.ஐ., ஆராய்ச்சி துறைத் தலைவர் ஹரிராம் சந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என, சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் நிறுவனர் பிரைம் பாயின்ட் சீனிவாசன், தேசியத் தலைவர் பிரியதர்ஷினி ராகுல் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Source link