புதுடில்லி, 'டில்லி உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா, அகில பாரதிய அதிவிக்த பரிஷத் நடத்திய

புதுடில்லி, ‘டில்லி உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா, அகில பாரதிய அதிவிக்த பரிஷத் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றார் என்ற காரணத்திற்காக, டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கை விசாரிக்க கூடாது என கெஜ்ரிவால் கூறுவதை ஏற்க முடியாது’ என, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

டில்லி மதுபான கொள்கை வழக்கிலிருந்து, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர், கடந்த மாதம் விடுவிக்கப்பட்டனர்.

விசாரணை நீதிமன்றம், இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அதை எதிர்த்து, சி.பி.ஐ., அமைப்பு சார்பில், டில்லி உயர் மன்றம், டில்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அதில், ஒரு வழக்கு, டில்லி கூடுதல் செஷன்ஸ் பெண் நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன், கோர்ட்டில் ஆஜரான கெஜ்ரிவால், தன் மீதான வழக்கை, பெண் நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா விசாரிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விரிவான பதிலளிக்குமாறு, சி.பி.ஐ.,க்கு நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா உத்தரவிட்டு உள்ளார்.

அதையடுத்து, சி.பி.ஐ., தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அகில பாரதிய அதிவக்த பரிஷத் நடத்திய சட்ட மாநாட்டில் பங்கேற்றார் என கூறி, தன் மீதான வழக்கை ஸ்வர்ணா காந்தா சர்மா விசாரிக்கக் கூடாது என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவதை ஏற்க முடியாது.

‘அப்படி ஏற்றுக் கொண்டால், பல முன்னாள் நீதிபதிகள், இன்னாள் நீதிபதிகள் பல அமைப்பினருடன் தொடர்புடைய சட்ட அமைப்புகளில் பங்கேற்று உள்ளனர்.

‘அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் இருந்து விலக்கக் கோரி, யாரும் மனு செய்வதில்லை. எனவே, நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மாவும், கெஜ்ரிவால் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலக்கக் தேவையில்லை’ என்றது.

மேலும், அதுபோன்ற சட்ட மாநாடுகளில் நீதிபதிகள் பங்கேற்பது வழக்கமானது தான் எனவும், சி.பி.ஐ., கூறியது.

Source link