புதுடில்லி: டில்லி, நொய்டா மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பல பகுதிகளில் நேற்று காலை மிதமான மழை பெய்து

புதுடில்லி: டில்லி, நொய்டா மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பல பகுதிகளில் நேற்று காலை மிதமான மழை பெய்து சூழ்நிலையை இதமாக்கியது. இதனால், டில்லிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டில்லி மாநகரில் சமீப நாட்களாக நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தது. இந்நிலையில், நேற்று காலை இதமான மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணி வரை டில்லியில் 5 மி.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சப்தர்ஜங் மற்றும் லோதி சாலை – 0.8, பாலம் – 0.4, அய நகர் – 2.6, பீதம்பூரா – 3.5, மயூர் விஹார் 1.0, ஜனக்புரி – 0.5 மி.மீ., மழை பெய்துள்ளது.

வெப்பநிலை குறைந்தபட்சமாக 20.2 பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட, 5.1 டிகிரி செல்ஷியஸ் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.

நேற்று காலையில் பெய்த மிதமான மழை காரணமாக டில்லி மாநகரில் இதமான சூழ்நிலை நிலவியது. காற்றின் தரக் குறியீடும் 190-ஆக பதிவாகி, மிதமான நிலையிலேயே இருந்தது. இதனால், டில்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல, அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசத்தின் நொய்டா, மதுரா ஆகிய இடங்களிலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் சில பகுதிகளிலும் நேற்று மிதமான மழை பெய்தது.

Source link