புதுடில்லி: “டில்லி மற்றும் ஹரியானாவில் ஒரு லட்சத்து 18,000 பேர் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டுள்ளனர்,”என, தேசிய

புதுடில்லி: “டில்லி மற்றும் ஹரியானாவில் ஒரு லட்சத்து 18,000 பேர் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டுள்ளனர்,”என, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தலைமை இயக்குநர் டாக்டர் ராகேஷ் குப்தா பேசினார்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில், ‘சுரக் ஷா சங்கல்ப் கார்யஷாலா’ எனப்படும் பாதுகாப்பு உறுதிமொழி பயிலரங்கம் டில்லியில் நேற்று நடந்தது.

தொற்று பயிலரங்கை துவக்கி வைத்த தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தலைமை இயக்குநர் டாக்டர் ராகேஷ் குப்தா பேசியதாவது:

டில்லியில் 59,079 பேரும், ஹரியானாவில் 59,642 பேரும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு டில்லி, புதுடில்லி, ஷாஹ்தாரா, மத்திய டில்லி, தென்கிழக்கு டில்லி, தெற்கு டில்லி மற்றும் வடமேற்கு டில்லி ஆகிய மாவட்டங்களில் எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் பானிபட், ரோஹ்தக், சிர்சா, ஜஜ்ஜார், குருகிராம், பரிதாபாத், பிவானி, ஹிசார், சோனிபட், கைத்தால் மற்றும் பதேஹாபாத் ஆகிய மாவட்டங்களில் ஏராளமானோர் எச்.ஐ.வி., தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

நாடு முழுதும், 2027-ம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்துக்குள், எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் பாதிப்பை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு நோய்த்தொற்றாக அறிவிக்கும் இலக்கை நோக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நோய் கண்டறியப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி., எனப்படும் தொடர் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை பெற வேண்டும். மேலும், தங்கள் உடலில் உள்ள வைரஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை நோக்கமாக கொள்ள வேண்டும்.

டில்லியில் எச்.ஐ.வி., தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் இன்னும் சில இடைவெளிகள் இருக்கின்றன. அடையாளம் காணப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.

ஆலோசனை கர்ப்ப காலம், பிரசவம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் ஏற்படக்கூடிய, தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

சரியான நேரத்தில் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் வாயிலாக எச்.ஐ.வி., பரவலை பரவலை முழுமையாகத் தடுக்க முடியும்.

எந்தக் குழந்தையும் எச்.ஐ.வி-.,யுடன் பிறக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link