புதுடில்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தை விளையாடுகிறது. அதிரடி துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இன்று துவக்க வீரராக களமிறங்க இருக்கிறார். அதேபோல, சிராஜூக்கு பதிலாக பும்ரா விளையாட உள்ளார். நமீபியாவைப் பொறுத்தவரையில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிகோங்கோ மற்றும் க்ருகெர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
ஏற்கனவே கத்துக்குட்டி அணியான அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய பேட்டர்கள் தடுமாறினர். இதனால், மற்றொரு கத்துக்குட்டி அணியான நமீபியாவுடன் இந்திய வீரர்கள் ஜொலிப்பார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஏறக்குறைய சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.
