புதுடில்லி: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட

புதுடில்லி: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை; மேற்காசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விநியோகம் தடை பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் விநியோகம் சீராக உள்ளது. எந்த இடத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மாநிலங்களுக்கான வணிக ரீதியிலான எல்பிஜி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15,440 மெட்ரிக் டன் எரிவாயு கடந்த 8 நாட்களில் வணிக ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழக்கமான ஒதுக்கீட்டை தவிர்த்து, கூடுதலாக 48,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், காஸ் சிலிண்டரின் பதுக்கல் மற்றும் கருப்பு சந்தை விற்பனையைத் தடுக்க நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர் மையங்களில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். தமிழகம், கர்நாடகா, பீஹார், ஹரியானா, மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நேற்று (மார்ச் 21) ஒரே நாளில் 1,200க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link