புதுடில்லி: 'தேஜஸ் மார்க் – 1ஏ' இலகுரக போர் விமானங்கள் தயாராக இருந்தாலும், அதற்குரிய இன்ஜின்களை ஒப்படை

புதுடில்லி: ‘தேஜஸ் மார்க் – 1ஏ’ இலகுரக போர் விமானங்கள் தயாராக இருந்தாலும், அதற்குரிய இன்ஜின்களை ஒப்படை க்காததால் இத்திட்டம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், இன்ஜின் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் ஹெச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக் ஸ் லிமிடெட் ‘ நிறுவனம் இழப்பீ டு கோரியுள்ளது.

ஒப்பந்தம்

நம் ராணுவத்துக்கு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, 83 தேஜஸ் மார்க் – 1ஏ இலகுரக போர் விமானங்களை தயாரிக்க கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த ஹெச்.ஏ.எல்., நிறுவனத்துடன், 48,000 கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு 2021ல் ஒப்பந்தம் போட்டது.

இந்த விமானத்தின் இன்ஜினை, அமெரிக்காவின், ‘ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற் கொண்டது. இதன்படி, 2024 மார்ச் முதல் 2028 பிப்ரவரிக்குள் இவற்றை தயாரித்து, மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ‘ஜெனரல் எலக்ட்ரிக்’ நிறுவனம் ஒப்பந்தத்தை மீறும் வகையில், தேஜஸ் போர் விமானத்திற்கான, ‘எப் 404 – ஐஎன்20’ என்ற இன்ஜின்களை உரிய நேரத்தில் ஒப்படைக்காததால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.இதன் காரணமாக அமெரிக்க நிறுவனத்திடம் ஹெச்.ஏ.எல்., இழப்பீடு தொகை கோரி உள்ளது.

தயார் நிலை

இது குறித்து, ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுனில் கூறுகையில், “ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 99 இன்ஜின்களில், இதுவரை ஆறு மட்டுமே வழங்கியுள்ளது. தற்போது, 20 தேஜஸ் போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.

”ஆனால், நாங்கள் இன்ஜினுக்காக காத்திருக்கிறோம். எனவே, ஒவ்வொரு தாமதமான இன்ஜின் வினியோகத்திற்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் உள்ளபடி, அந்நிறுவனத்திடம் இழப்பீடு தொகை கோரப் பட்டுள்ளது,” என்றார்.

இதற் கிடையே, ‘ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘தேஜஸ் போர் விமானத்தின் இன்ஜின் தாமதத்திற்கு வினியோக தொடரில் ஏற்பட்ட தடைகளே காரணம்.

‘தற்போ து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், 20 இன்ஜின்கள் என்ற வீதத்தில் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படு ம்’ என குறிப்பி ட்டுள்ளது.

Source link