புதுடில்லி: தேர்தல் வந்து விட்டாலே பலவித திட்டங்களை தயாரித்து விடுகிறார் பிரதமர் மோடி. தமிழகத்தில் சட்டசபை

புதுடில்லி: தேர்தல் வந்து விட்டாலே பலவித திட்டங்களை தயாரித்து விடுகிறார் பிரதமர் மோடி. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், 8 கோடி தமிழக மக்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதப் போகிறாராம்… அதுவும் தமிழில்!

இந்த கடிதத்தில், ‘தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை குறிப்பிட்டு, அவர்களின் செயல்களை புகழ்ந்து சொல்லப் போகிறார். தி.மு.க., அரசின் ஊழல்கள் குறித்தும் விலாவாரியாக கடிதத்தில் குறிப்பிடுவார் மோடி’ என்கின்றனர் பா.ஜ., நிர்வாகிகள்.

மேலும், ‘பா.ஜ., தமிழகத்தில் எப்படி வளர்ந்தது, தமிழக மக்களுக்காக என்னென்ன செய்யப் போகிறோம், பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்’ என்றும் மோடி குறிப்பிடுவார் என்கின்றனர்.

தேர்தல் வந்து விட்டாலே பலவிதமான கோஷங்களை கட்டவிழ்த்து விடுவார் பிரதமர் மோடி. உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், ‘ராம் ராம்’ என, ராமனை கோஷமாக்கினார்.

தற்போது, மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால் அங்கு முக்கிய தெய்வமான காளியை மனதில் வைத்து, ‘ஜெய் காளி’ என, பேச ஆரம்பித்து விட்டார் மோடி.

இதே போல, தமிழகத்திற்கும் ஒரு கோஷத்தை தயாராக வைத்துள்ளாராம். அது, முருகக் கடவுளின் புகழ் பாடும், வெற்றி வேல், வீர வேல். தன் கடிதத்தில் கடைசியாக, ‘வெற்றி வேல், வீர வேல் என்ற கோஷத்துடன், கடிதத்தை நிறைவு செய்வார்’ என, கட்சி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Source link