புதுடில்லி: நம்மிடம் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. சுத்திகரிப்பு ஆலைகள் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரித்துள்ளன என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
நேற்றைய தினம் வதந்திகளை பரப்பும் சில நிகழ்வுகள் எங்களின் கவனத்திற்கு வந்தன. மேலும் சில பகுதிகளில் மக்கள் பீதியுடன் பெட்ரோல், டீசல் வாங்குவதும் காணப்பட்டது. எங்களிடம் போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது.
சுத்திகரிப்பு ஆலைகள், உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தியை அதிகரித்து இருக்கின்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன. எரிபொருள் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கிடைப்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
குழாய்வழி உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ள கல்வி நிலையங்கள், விடுதிகள், அங்கன்வாடி சமயலறைகள் போன்றவற்றிக்கு 5 நாட்களுக்குள் பிஎன்ஜி இணைப்புகள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு சுஜாதா சர்மா பேட்டியளித்தார்.
