புதுடில்லி; நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவை மேற்கு வங்கமும், திரிணமுல் காங்கிரசும்

புதுடில்லி; நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவை மேற்கு வங்கமும், திரிணமுல் காங்கிரசும் அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டம் கோசைப்பூரில் சர்வதேச சந்தால் சமூக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். ஆனால் இந்த மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடம் சிறியது,, பான்சிதேவா என்ற இடத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கப்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டதாக பாஜ குற்றம்சாட்டி இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதை ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பிட்டு தமது அதிருப்தியையும் வெளியிட்டு இருந்தார். இந் நிலையில் அவரின் அதிருப்தி மற்றும் மாநாட்டுக்கான இட அனுமதி மறுத்தது குறித்து பிரதமர் மோடி மேற்கு வங்க அரசை கடுமையாக சாடி உள்ளார். ஜனாதிபதியை மேற்கு வங்கமும், திரிணமுல் காங்கிரசும் அவமதித்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவு;

இந்த நிகழ்வு வெட்கக்கேடானது மற்றும் இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒன்று. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பழங்குடி சமூகத்தினர் இதனால் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

பழங்குடி சமூகத்தில் இருந்து வந்துள்ள ஜனாதிபதி வெளிப்படுத்திய வேதனை, கவலை ஆகியவை நாட்டு மக்களின் இதயங்களில் ஒரு ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்திவிட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் அரசானது, அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது.

அதன் நிர்வாகமே ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு காரணம் ஆகும். சாந்தல் கலாசாரம் போன்ற ஒரு முக்கிய விஷயத்தை மேற்கு வங்க அரசானது வெகு சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொண்து துரதிருஷ்டவசமானது.

ஜனாதிபதி பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதன் கண்ணியம் எப்போதும் காக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசும், திரிணமுல் காங்கிரசும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதம் மோடி தமது பதிவில் கூறி இருந்தார்.

Source link