புதுடில்லி: பல்வேறு மாநில கவர்னர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். தமிழக கவர்னர் ரவி, மேற்கு வங்க கவர்னராக

புதுடில்லி: பல்வேறு மாநில கவர்னர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். தமிழக கவர்னர் ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழக கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க கவர்னராக இருந்த சி.வி.ஆனந்தபோஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

தமிழக கவர்னர் ரவி,மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக கவர்னர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

மேலும்,

லடாக் துணை நிலை கவர்னர் – வினய் குமார் சக்சேனா

டில்லி துணை நிலை கவர்னர்- தரன்ஜித் சந்து

தெலுங்கானா – சிவ்பிரதாப் சுக்லா

மஹாராஷ்டிரா- ஜிஷ்ணு தேவ் வர்மா

நாகாலாந்து- நந்த் கிஷோர் யாதவ்

பீஹார்- சையத் அடா ஹஸ்னன்

ஹிமாச்சல் பிரதேசம்- கவிந்தர் குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source link