புதுடில்லி: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாக , நமது நாட்டிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.
விரைவில் ஒப்பந்தம் இறுதியாகலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெனிசுலாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியுடன், அதிபர் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
என்ன விஷயம் குறித்து இருவரும் பேசினார்கள் என்ற விவரத்தை இதுவரை வெளியிடப் படவில்லை.
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா தடையற்ற வர்த்த ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஏற்படுத்த தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
