புதுடில்லி: பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் கலந்துரையாடினார். மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் இன்னும் முற்றுப் பெறவில்லை. போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமும் ஓயவில்லை.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வருமாறு இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், ஐநா, உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஈரானில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது 5 நாட்கள் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று தமது நாட்டு படைகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
இந் நிலையில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் கலந்துரையாடினார். மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த விவரத்தை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்டு உள்ளார்.
அவர் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;
அதிபர் டிரம்ப் சற்று முன்னர் பிரதமர் மோடியுடன் பேசினார். மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலவும் சூழல், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைப்பதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இவ்வாறு அந்த பதிவில் செர்ஜியோ கோர் கூறி உள்ளார்.
