புதுடில்லி: பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மா, 1890ம் ஆண்டு வரைந்த, ‘யசோதாவும், கிருஷ்ணரும்’ ஓவியம், மும்பையில் இன்று நடந்த ஏலத்தில் 167.20 கோடி ரூபாய்க்கு விற்பனை.
இது, எக்காலத்திலும் இல்லாத ஒரு வரலாற்று சாதனையாகும்.இதற்கு முன், எம்.எப்.உசேன் வரைந்த ஒரு ஓவியம் 118 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதே பெரிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ரவி வர்மாவின் ஓவிய விற்பனை முறியடித்து விட்டது.இந்த ஓவியத்தை, சீரம் இன்ஸ்டிட்யூட் நிர்வாக இயக்குனர் டாக்டர் சைரஸ் பூனாவாலா வாங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், ”இந்த ஓவியத்தை வாங்கியதன் மூலம் நான் பெருமை அடைகிறேன். தேசத்தின் புதையலாக கருதப்படும் இந்த ஓவியத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் காட்சிக்கு வைப்பேன்,” என்றார்.
யசோதை பசுவிடம் பால் கறப்பது போலவும், குழந்தை கிருஷ்ணர் பால் கேட்பது போலவும் தத்ரூபமாக இந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
