புதுடில்லி: பெற்றோர் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஓபிசி கிரீமி லேயர்

புதுடில்லி: பெற்றோர் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஓபிசி கிரீமி லேயர் நிலையை தீர்மானிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில்சர்வீஸ் தேர்வுகளில் மாணவர்கள் பலர் ஓபிசி பிரிவினருக்கான கிரீமிலேயர் அல்லாத பிரிவில் இட ஒதுக்கீடு கேட்டனர். ஆனால், அவர்ளின் பெற்றோர்கள் பலர் பொதுத்துறை நிறுனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றினர். அவர்களின் சம்பளத்தை அவைத்து அவர்ள், கிரீமிலேயர் பிரிவில் வருவார்கள் என அறிவித்தது.

இது தொடர்பாக கடந்த 2004 ல் மத்திய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதல், ஓபிசி பிரிவினரின் பெற்றோர், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைகள் அல்லது தனியார நிறுவனங்களில் பணியாற்றினால், பெற்றோரின் பணிகள் அரசு பணிக்கு இணையானதா என்பது குறித்த அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளில் கிரீமிலேயர் நிலையை வருமான சோதனை மூலம் வழங்க வேண்டும். அப்போது, பெற்றோரின் வருமானம் மற்றும் மாற்று வழிகளில்( சம்பளம் மற்றும் விவசாயம் அல்லாத) வருவதை ஆய்வு செய்ய வேண்டும். அதாவது, அவர்களின் சம்பளம் மட்டும் அல்லது மாற்று வழிகளில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் வரும் வருமானம் 2.5 லட்ச ரூபாயை தாண்டினால், தேர்வர்கள் கிரிமீலேயர் வகுப்பில் வருவார்கள் என அதில் கூறப்பட்டு இருந்தது.

இதனை எதிர்த்து பல தேர்வர்கள் மத்திய தீர்ப்பாயம், சென்னை, டில்லி,கேரள ஐகோர்ட்களை நாடினர். இதனை விசாரித்த நீதிமன்றங்கள், அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. ஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம் கூறியதாவது: ஒரு தேர்வர் ,ஓபிசி பிரிவினரின் கிரீமிலேயருக்குள் வருகிறாரா அல்லது இல்லையா என்பதை பெற்றோரின் மாதாந்திர சம்பளத்தின் அடிப்படையில் மட்டும் தீர்மானிக்க முடியாது. ஓபிசி கிரீமிலேயர் அறிமுகப்படுத்திய மண்டல் கமிஷன் தொடர்பான இந்திரா சாஹானியின் தீர்ப்பில் எடுத்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நோக்கத்தை தோற்கடிக்கும் விதமாக சம்பள வருமானத்தை இயந்திர தனமாக கணக்கிட முடியாது எனத் தெரிவித்துள்ளது.

Source link