புதுடில்லி: போர் காரணமாக மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியாவின் இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தேன். மேலும், கப்பல் போக்குவரத்து வழித்தடங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து இருவரும் உறுதியேற்றோம்.
சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் நலனுக்காக அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
