புதுடில்லி: ''மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. பெண் சக்தியின் உருவமாக திகழ்ந்ததார்'' என மன் கி

புதுடில்லி: ‘‘மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. பெண் சக்தியின் உருவமாக திகழ்ந்ததார்” என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: விவசாயம் முதல் பல்வேறு விஷயங்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் பயனுள்ளதாக அமைகிறது. சமீபத்திய ஏ.ஐ., மாநாட்டில் நமது நாட்டின் முன்னேற்றத்தை பார்க்க முடிந்தது. இதனை நான் பாராட்டுகிறேன். டிஜிட்டல் முறைகேட்டை தடுக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்வேர்டு, ஆதார் ஒடிபி, வங்கி விவரம் உள்ளிட்டவற்றை யாரிடமும் நீங்கள் பகிர்ந்து கொள்ள கூடாது.

மகத்தான தலைவர்

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. இவர் பெண் சக்தியின் உருவமாக திகழ்ந்தார். இவரது தேசபக்தி மிக பெரியது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடுமையாக பாடுபட்டார். ஜெயலலிதா பல பெண்களின் மனதை கவர்ந்தவராக இருந்தார். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. கேரளாவில் உறுப்பு தானம் செய்த 10 மாத குழந்தையின் பெற்றோரின் தியாகத்தை வணங்குகிறேன்.

சிறந்த தலைவர்

அம்மா ஜெயலலிதா சிறந்த தலைவர். மக்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களின் மனதில் என்றென்றும் இருப்பார்கள் என்பதற்கு ஜெயலலிதா உதாரணம். இன்று நான் தமிழகத்திற்கு சென்றால் ஜெயலலிதா மீதான மக்களின் அன்பை பார்க்க முடிகிறது. ஜெயலலிதா பெயரைச் சொல்லும் போதே, மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது. ஜெயலலிதாவின் சிந்தனை மிகவும் தெளிவானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link