புதுடில்லி: மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் மற்றும் கடைசி நேர வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக டில்லி –

புதுடில்லி: மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் மற்றும் கடைசி நேர வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக டில்லி – மான்செஸ்டர் விமானம் நடுவழியில் திருப்பி அனுப்பப்பட்டது.

தலைநகர் டில்லியில் இருந்து மான்செஸ்டர் நகருக்கு 6E033 இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் எத்தியோப்பியாவின் எல்லைக்கு அருகில் உள்ள வான்வெளியை நெருங்கி கொண்டிருந்த போது, திடீரென நடுவானில் திரும்பியது. பின்னர் இந்த விமானம் இந்திய வான்வெளியில் மீண்டும் நுழைந்து, தலைநகர் டில்லிக்கே திரும்பிச் சென்றது.

என்ன காரணத்துக்காக இந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடமான டில்லிக்கே திருப்பி விடப்பட்டது என்பது குறித்து தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது;

மத்திய கிழக்கு மறும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றச்சூழல் எங்கள் நிறுவனத்தின் சில விமானங்கள் நீண்ட அல்லது வேறு பாதைகளில் பயணிக்க வேண்டி இருக்கலாம். தற்போது காணப்படும் சூழலால் டில்லி-மான்செஸ்டர் விமானம் 6E033 விமானம் கடைசி நேர வான்வெளி கட்டுப்பாடுகள் எதிரொலியாக, புறப்பட்ட இடத்திற்கு திரும்ப அனுப்ப வேண்டியதாகி விட்டது.

இந்த பயணத்தை மீண்டும் தொடரமுடியுமா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பு என்பது எங்களுக்கு எப்போதுமே முக்கியம் ஆகும்.

இவ்வாறு இண்டிகோ விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

டில்லி – மான்செஸ்டர் இடையே பிப்.26ம் தேதிக்கு பின்னர் தற்போது தான் விமான சேவை தொடங்கியது. இதன் தூரம் கிட்டத்தட்ட 6829 கிமீ. சராசரியாக பயண நேரம் என்பது 11 மணி நேரம் ஆகும்.

Source link