புதுடில்லி: முகலாய வம்சத்தின் கடைசி முகலாய பேரரசர் போலவும், போலி காந்தி குடும்பத்தின் கடைசி இளவரசராகவும் ராகுல் திகழ்கிறார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக சாடி உள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: ராகுலைப் போல தொலைநோக்கு பார்வை இல்லாத லோக்சபா எதிர்க்கட்சி தலைவரை இதுவரை நான் பார்த்த்தது இல்லை. சபாநாயகருக்கு எதிராக ஓட்டெடுப்பு நடத்தக்கோரிய பின், சபையை விட்டு வெளியேறுகின்றனர். முகலாய வம்சத்தின் கடைசி முகலாய பேரரசர் போலவும், போலி காந்தி குடும்பத்தின் கடைசி இளவரசராகவும் ராகுல் திகழ்கிறார்.
ராகுல், மம்தா பானர்ஜி நகர்ப்புற நக்சல்கள் போல நடந்து கொள்கிறார்கள். மேற்கு வங்க அரசு திரிணமுல் காங்கிரஸ் மாநிலத்தை பாதிக்கும் முக்கிய பிரச்னைகளை தீர்க்கத் தவறிவிட்டது. அவரது நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து வருகிறது. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் வேலையின்மை பற்றி ஒருபோதும் பேசுவதில்லை.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றி அவர் பேசுவதில்லை. அவர் பேசும்போதெல்லாம், தேர்தல் கமிஷன், லோக்சபா அல்லது சபாநாயகரைப் பற்றி மட்டுமே பேசுகிறார். 15 ஆண்டுகளாக மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மக்கள் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்பார்கள். இவ்வாறு கிரிராஜ் சிங் கூறினார்.
