புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய அரசு

புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய அரசு மறைப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை; டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயை நோக்கி வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. அதேவேளையில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலையும் அதிகரிக்கிறது. இது வெறும் எண்கள் மட்டுமல்ல, பணவீக்கத்திற்கான அறிகுறிகளாகும். ஆனால், எந்தப் பிரச்னையும் இல்லை, அனைத்தும் சுமூகமாக இருப்பதாக மத்திய அரசு சொல்கிறது.

ஆனால், உண்மை என்னவென்றால், தயாரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிக்கும். சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். விலைவாசி உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படும். தேர்தல்களுக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலைகளும் உயர்த்தப்படும். இதனைக் கட்டுப்படுத்த மோடி தலைமையிலான அரசிடம் எந்த உத்திகளும் இல்லை. வெறும் வாய் பேச்சு மட்டும் தான் உள்ளது. அனைத்திற்கும் மேலாக, இந்த விவகாரத்தில் அரசு என்ன சொல்கிறது என்பது கேள்வியல்ல, கடைசியாக உங்களிடம் என்ன இருக்கப் போகிறது என்பது தான், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link