புதுடில்லி: மேற்காசிய போர் பதற்றத்துக்கு இடையே, ஈரானில் இருந்து 1,043 இந்தியர்கள் உட்பட மொத்தம் 4.26 லட்சம்

புதுடில்லி: மேற்காசிய போர் பதற்றத்துக்கு இடையே, ஈரானில் இருந்து 1,043 இந்தியர்கள் உட்பட மொத்தம் 4.26 லட்சம் பயணியர் இந்தியா திரும்பியுள்ளனர்.

மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் குறித்து அமைச்சர்கள் இடையேயான விளக்க கூட்டம் நே ற்று நடந்தது.

இது குறித்து வளைகுடா நாடுகளுக்கான மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அசீம் மஹாஜன் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி 28 முதல் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை சேர்ந்த 2,149 விமானங்கள் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 4.26 லட்சம் பயணியர் இந்தியா திரும்பியுள்ளனர். மேற்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளின் நிலவரங்களை கூர்மையாக கண்காணித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவ பிரத்யேக கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.

ஈரானில் உள்ள இந்தியர்களை ஆர்மீனியா, அஜர்பைஜான் வழியாக இந்தியா திரும்புவதற்கு தொடர்ந்து உதவுகிறோம். எங்களது தூதரகத்தின் உதவியுடன், 717 மாணவர்கள் மற்றும் 326 மாணவர்கள் அல்லாத நபர்கள் உட்பட, மொத்தம் 1,043 இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சவுதியின் ரியாத்தில் மார்ச் 18ல் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் உடல், நேற்று காலை இந்தியா வந்தடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link