புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக மூலப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் காண்டம்

புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக மூலப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் காண்டம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காண்டம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் காரணமாக, உலக நாடுகளின் விநியோகச் சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது காண்டம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

முக்கிய மூலப்பொருட்களின் தட்டுப்பாடு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. காண்டம் தயாரிக்கப் பயன்படும் சிலிகான் எண்ணெய் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, அம்மோனியாவின் விலையும் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தனது அம்மோனியா தேவையில் 86 சதவீதத்தை சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காண்டம் தயாரிப்பு தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் கொச்சி கிளை முன்னாள் தலைவர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், ‘விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக காண்டம் பயன்பாடு குறையும். இது தேவையற்ற கருத்தரிப்புகள், தாய்-சேய் இறப்பு விகித அதிகரிப்பு மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும்,’ என எச்சரித்துள்ளார்.

Source link