புதுடில்லி: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அது குறித்த பணியில் ஈடுபட்ட நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடித்த விவகாரத்தை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு சவால் விடுக்கும் செயல். இதில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் போது பெயர் நீக்கப்பட்டதாக கூறி மால்டா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளவர். அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 3 பேர் உட்பட 7 பேரை போராட்டக்காரர்கள் சிறை பிடித்தனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, விபுல் எம். பஞ்சோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த சம்பவம் நீதித்துறை அதிகாரிகளை மிரட்டுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சி. நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும் சவால் விடுப்பது ஆகும். இது ஒரு வழக்கமான சம்பவம் அல்ல. மாறாக நீதித்துறை அதிகாரிகளின் மன உறுதியை குலைக்கவும், விடுபட்டவர்களின் ஆட்சேபனைகள் குறித்து முடிவு எடுப்பதற்கு தற்போதுள்ள செயல்முறையை தடுக்கவும் திட்டமிட்டு உள்நோக்கவும் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை.
நீதித்துறை அதிகாரிகள் மீது உளவியல் ரீதியான தாக்குதலை உருவாக்கும் வகையில், யாரும் தலையிடவோ அல்லது சட்டத்தை தங்கள் கையில் எடுக்கவோ அனுமதிக்க முடியாது. அது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு
இதுவும் மேற்கு வங்க அரசின் கடமை தவறுதல் ஆகும். தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், சிறைபிடிக்கப்பட்ட இடத்திற்கு மாவட்ட கலெக்டர் அல்லது எஸ்பி நேரில் வரவில்லை. கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதி, டிஜிபி மற்றும் உள்துறை செயலரரை அழைக்க வேண்டியிருந்தது. இதன் பிறகுதான் அவர்கள்தலைமை நீதிபதி வீட்டிற்கு வந்தனர்.நீதிமன்ற தலையிட்டிற்கு பிறகே நீதித்துறை அதிகாரிகள் நள்ளிரவுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் சென்ற வாகனங்கள் மீது கல் எறிந்து தாக்கப்பட்டது.
சிறைபிடிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்பதை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேணடும். எந்தவொரு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்சேபனை மனுக்கள் மீது பதிலளிக்கவும், விசாரணையில் பங்கேற்கவும், ஐந்து நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
இது தொடர்பாக தலைமைச்செயலர், டிஜிபி, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கசமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என தலைமைச்செயலர், டிஜிபி, கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ள நீதிமனறம், வழக்கை ஏப்., 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் அவர்கள் ஆன்லைன் வாயிலாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்
மேலும், நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது என்ஐஏவிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தவரிட்ட நீதிபதிகள் அந்த அமைப்பு தனது விசாரணை அறிக்கையை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்
