புதுடில்லி: வெளிநாடுகள் சென்று திரும்பும் இந்தியர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி

புதுடில்லி: வெளிநாடுகள் சென்று திரும்பும் இந்தியர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி வரம்பை 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.

‘பயண உடைமைகளுக்கான விதிகள் 2026’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன. பத்தாண்டுகள் பழமையான முந்தைய விதிகளுக்கு மாற்றாக இவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இப்புதிய சட்டத்தின் கீழ், தரை வழியாக இன்றி, வான்வழியாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ இந்தியா வரும் குடிமக்கள் அல்லது வம்சாவளி சுற்றுலா பயணியர் 75,000 ரூபாய் வரையிலான பொருட்களுக்கு சுங்க வரி இல்லாமல் கொண்டு வர அனுமதிக்கப் படுவர்.

இதேபோன்று, வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கான வரம்பும்,15,000 லிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது. வெளிநாட்டில் ஓராண்டிற்கும் மேலாக வசித்துவிட்டு தாயகம் திரும்பும் இந்திய குடிமக்களில், பெண்கள் 40 கிராம் மற்றும் ஆண்கள் 20 கிராம் ஆபரண தங்கம் சுங்கவரியின்றி கொண்டு வர அனுமதிக்கப்படுவர்.

குறிப்பாக, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட, கற்கள் பதிக்கப்பட்ட அல்லது பதிக்கப்படாத அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணங்கள் மட்டுமே இதில் அடங்கும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.

Source link