புதுத்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., வேட்பாளர்களுக்காக நேற்று காலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக்

புதுத்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., வேட்பாளர்களுக்காக நேற்று காலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை. அப்போது மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் இருந்து போன் வந்தது.

எடுத்து பேசிய அண்ணாமலையிடம்,”கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் உள்ளது. நீங்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். உடனடியாக புறப்பட்டு, சென்னை வர வேண்டும். ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்கிறேன்,” என சொல்லி, அவரை சென்னைக்கு அவசரமாக வரவழைத்தார் பீயூஷ் கோயல்.

அதையடுத்து அவர், சென்னை கமலாலயத்தில் நடந்த மையக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக ‘நீங்கள், வரும் சட்டசபைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும். இது கட்சித் தலைமையின் விருப்பம். மற்ற எல்லா தலைவர்களும் தேர்தலில் போட்டியிடும்போது, நீங்கள் மட்டும் ஒதுங்கினால், கட்சிக்குள் ஏதோ குழப்பம் இருப்பது போன்ற எண்ணம் வெளிப்படுகிறது.

‘அ.தி.மு.க.,விடம் இருந்து பா.ஜ.,வுக்கு பெறப்பட்டிருக்கும் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட வேண்டும்’ என்று பீயூஷ் கோயல் வலியுறுத்திச் சொல்ல, முதலில் அதை மறுத்திருக்கிறார் அண்ணாமலை.

தொடர்ந்தும், அண்ணாமலையை போட்டியிடச் சொல்லி வலியுறுத்தி உள்ளார், கோயல். ஆனால், அண்ணாமலை பிடிகொடுக்கவில்லை என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவாதம் எதிர்பார்ப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Source link