புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் 'மினர்வா'-அதானி ஒப்பந்தம்

புதுடில்லி, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மினர்வா நிறுவனத்துடன் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இணைந்து இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி, அதானி கிரீன் எனர்ஜியின் துணை நிறுவனமான அதானி ரினிவபிள் எனர்ஜி மிடில் ஈஸ்ட், ஐக்கிய அரபு அமீரகத்தின் மினர்வா ஆர்.எஸ்.சி., நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவில் சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேம்படுத்துதல், கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் அவற்றை இயக்குதல் ஆகியவற்றை இந்த கூட்டு நிறுவனம் செயல்படுத்தும். இந்நிறுவனத்திலிருந்து 20 சதவீத பங்குகளை அதானி ரினிவபிள் எனர்ஜி மிடில் ஈஸ் ட் பெறும்.

மேலும், இந்நிறுவனத்தில் மினெர்வா தரப்பில் 4 இயக்குநர்களையும், அதானி கிரீன் எனர்ஜி தரப்பில் ஒரு இயக்குநரையும் நியமிக்கும் உரிமையை இரு நிறுவனங்கள் பெற்றுள்ளன.

Source link