கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளிலேயே தங்கள் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்தியி ருக்கும் காங்கிரஸ், யார் யார் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்ற முழு விவரத்தையோ, மனுவை யார் வாபஸ் வாங்கப் போகிறார்கள் என்ற விவரத்தையோ இதுவரையிலும் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.
இறுதிப்பட்டியல் வெளியாகும் போதே காங்கிரஸ் தரப்பில் யார் உள்ளனர் என்பது தெரியவரும். இவர்களுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி, ஏற்கெனவே கூறியிருந்தது போலவே, சரிபாதியாக 50 விழுக்காடு வாய்ப்பை பெண்களுக்கு அளித்துள்ளது.
இக்கட்சி புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 28-ல் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் சரிபாதியாக 14 பெண் வேட்பாளர்களை நிறுத்தி யிருக்கிறது.
‘சமூக நீதியை பேசினால் மட்டும் போதாது..’
முக்கிய கட்சிகள் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது பற்றி புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலர் ஜெகன்நாதன் கூறுகையில், “தேசிய கட்சிகளான பாஜக, சமூக நீதி மற்றும் பெண்கள் உரிமை பற்றி தொடர்ச்சியாக அரசியல் பிரச்சாரம் செய்து வரும் திமுக ஆகிய பிரதான கட்சிகள் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஒரு பெண் வேட்பாளருக்கு கூட வாய்ப்பு வழங்காதது கடும் கண்டனத்திற்கு உரியது.
